Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டில்லி அடுக்குமாடியில் தீ- தந்தை 2 குழந்தைகள் பலி

டில்லி துவாரகா  பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டடத்தில் இன்று  பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் இருந்து தப்பிக்க 7வது மாடி பால்கனியில் இருந்து யாஷ் யாதவ் மற்றும் அவரது 10 வயது மகன், மகள் ஆகிய 3 பேர் குதித்தனர். இவர்கள் பலத்த காயம் அடைந்தனர்.

உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு  சிகிச்சை பலன் இன்றி யாஷ் யாதவ் மற்றும் அவரது 10 வயது மகன், மகள் ஆகிய 3 பேரும்  இறந்தனர்.   சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

யாதவின் மனைவியும், மூத்த மகனும் தீ விபத்தில் இருந்து உயிர் தப்பித்தனர். இவர்கள் லேசான காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

error: Content is protected !!