Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஐபிஎல்…டில்லி வீரர்களின் உபகரணங்கள் திருட்டு

ஐபிஎல் டெல்லி அணி வீரர்களின் பேட் மற்றும் பிற கிரிக்கெட் உபகரணங்கள் திருடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரில் இருந்து டில்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு, அவர்களது உடைமைகளில் இருந்து , அவர்களது பேட்கள் மற்றும் பிற கிரிக்கெட் உபகரணங்கள் திருடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.டில்லி அணியின் டேவிட் வார்னர் ,பிலிப் சால்ட் , மிட்சேல் மார்ஷ் , யாஷ் துல் உள்ளிட்ட வீரர்களின் 16 லட்சம் மதிப்புள்ள உபகரணங்கள் மாயமாகியுள்ளது. இந்தப் பிரச்னை தொடர்பாக எவ்வாறு காவல்துறையின் உதவியைப் பெறுவது என்பது குறித்து அணி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

இந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணி 5 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியிலும் வெற்றி பெறவில்லை. கடந்த 15 ம் தேதி நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியிடம் டில்லி தோல்வி அடைந்தது. ;மேலும் அடுத்த போட்டியில் நாளை கொல்கத்தா அணியை டில்லி எதிர்கொள்கிறது .

5 போட்டியிலும் தோல்வி அடைந்த உங்களுக்கு எதற்கு இந்த கிரிக்கெட் உபகரணங்கள் என்ற கோபத்தில் ரசிர்கள் யாரும் அதனை எடுத்து சென்று விட்டார்களோ என்ற பேச்சும் எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!