மழைக்காலங்களில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் போல் பட்டு கைத்தறி நெசவாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என கும்பகோணத்தில் நடைபெற்ற பட்டு கைத்தறி நெசவாளர்கள் என அழைக்கப்படும் சௌராஷ்ட்ரா சமூகத்தினரின் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம் .
தற்போதுள்ள மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் இருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்திற்கு இடம் பெயர்ந்தவர்கள் சௌராஷ்ட்ரா சமூகத்தினர் .
இவர்களது பிரதான தொழில் பட்டு கைத்தறி நெசவுத்தொழில் .
சௌராஷ்ட்ரா சமூகத்தினரின் மாநில மாநாடு இன்று கும்பகோணத்தில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் மழைக்காலங்களில் மீன் பிடிக்க முடியாத காரணங்களால் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது.
அதனைப் போலவே கைத்தறி நெசவாளர்களுக்கும் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். மழைக்காலங்களில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் காரணத்தால்
பட்டு கைத்தறி நெசவுத் தொழில் செய்ய முடியாத நிலை எனவே மழைக்காலத்தில் பட்டு கைத்தறி நெசவாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் , தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சென்னைக்கு செல்லும் கைத்தறி நெசவாளர்கள் மற்றும் இந்த சமூகத்தைச் சார்ந்தவர்கள் பயனடையும் வகையில் சௌராஷ்ட்ரா பவன் கட்டுவதற்கு தமிழக அரசு காலி மனை வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .
தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய பகுதிகளில் சௌராஷ்டிரா சமூகத்தினர் அதிகம் உள்ள நிலையில் ஒன்றிய அரசு இந்த சமூகத்திற்கு நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என்றும் , இந்த சமூகத்தினரின் குலதெய்வம் குஜராத் மாநிலத்தில் உள்ள சோமநாதர் ஆலயம் ஆகும்.
அந்த ஆலயம் அமைந்துள்ள இடத்தில் சௌராஷ்டிரா பவன் கட்ட மத்திய அரசு நிலம் வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
