கரூரில் ஜாதி ஆணவப் படுகொலைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்; தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஜாதி ஆணவப் படுகொலைகளை கண்டித்தும், அவற்றைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தியும், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தோழர் களம் அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் ராஜீவ்காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, ஜாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில், ஜாதி ஆணவப் படுகொலைகளால் பாதிக்கப்படும் காதல் ஜோடிகளுக்கு உரிய நீதி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு தனிச் சிறப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும்
மேலும், சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட தம்பதிகளின் வாரிசுகளுக்கு சமூக முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் அரசு வேலைவாய்ப்பு, கல்வி, கடன் உள்ளிட்ட துறைகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை இயற்ற வேண்டும்.
இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், சமூகத்தில் நிலவும் ஜாதி அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் ஆணவக் குற்றங்களை குறைப்பதில் முக்கிய முன்னேற்றம் ஏற்படும் என கூறினர்.
