Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இலங்கையில் டெங்கு பரவல் தீவிரம்- நாளுக்கு நாள் அதிகரிப்பு

இலங்கையில் டெங்கு பரவல் தீவிரம்- நாளுக்கு நாள் அதிகரிப்பு

அண்டை நாடான இலங்கையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்நாட்டில் தீவிரமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக 1000 பேர் வரை பாதிக்கப்படுவதாக இலங்கை சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

நடப்பாண்டில் (2026-ல்) இதுவரை சுமார் 68,000 பேருக்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், தற்போது வரை அங்கு டெங்கு காய்ச்சலுக்கு 47 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொசு கடிக்கு ஆளாகாமல் இருக்க பள்ளி மாணவர்கள் கைகள் மற்றும் கால்களை முழுமையாக மூட கூடிய வகையிலான பொருத்தமான ஆடைகளை அணிய அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும் நாடு முழுவதும் கொசுக்களை ஒழிக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதனிடைய டெங்கு பரவல் மிகத் தீவிரமடைந்து வருவதால், நாட்டின் பிரதான மருத்துவமனைகளில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து கடுமையான இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இலங்கை சுகாதாரத்துறையினர் மற்றும் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினர், பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களைச் சுத்தமாக வைத்திருக்கவும், தேங்கிக் கிடக்கும் மழைநீரை அகற்றி கொசுப் புழுக்கள் உருவாகும் வாய்ப்புகளை முற்றிலும் குறைக்குமாறும் தீவிர அறிவுறுத்தலை வழங்கி இருக்கிறார்கள்.

error: Content is protected !!