Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி-சீனிவாச நகர் பகுதி சாலையில் பள்ளம்… சீரமைக்க கோரிக்கை

திருச்சி-சீனிவாச நகர் சாலையில் பள்ளம்-சீரமைக்க கோரிக்கை

திருச்சி வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் தலைவர் காளிமுத்து, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் பி கே ஆனந்த், துணைத்தலைவர் ஏபி ரவி, துணை செயலாளர் ஏ ராஜன், கண்ணன் உஜ்ஜீவி வெங்கடேசன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் நிஷா ஓட்டல் பாண்டியன் டிப்டாப் சாதிக் கேக் போர்ட் கிருபானந்தம் ஆகியோர் திருச்சி மாநகராட்சி மண்டலக்குழு – 5 அலுவலகத்தில் உதவி ஆணையரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருச்சி வயலூர் ரோடு சீனிவாசன் நகர் மெயின் ரோடு பகுதியில் மாநகராட்சி மெயின் ரோடு பள்ளம் பறித்து சரியாக மூடாமல் போக்குவரத்துக்கு இடையூறாகவும் பொதுமக்களுக்கு விபத்துக்கு உள்ளாகும் நிலைமையிலும் உள்ளது. மேலும் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!