உலக பிரசித்தி பெற்ற மகாமக திருவிழா தொடர்புடைய சிவாலயங்களில் ஒன்றான கும்பகோணம் மடத்து தெருவில் உள்ள காளகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் இன்று பட்டப் பகலில் உண்டியல் கொள்ளை . கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்கள் தொடர்பாக கும்பகோணம் நகர கிழக்கு காவல் நிலையத்தார் விசாரணை .
உலகப் புகழ்பெற்ற மகாமக விழா தொடர்புடைய 12 சிவாலயங்களில் ஒன்று கும்பகோணம் மடத்து தெருவில் உள்ள காளகஸ்தீஸ்வரர் ஆலயம் .
இந்த ஆலயத்தில் இன்று மதியம் நடையை அடைத்து விட்டு சென்ற கோவில் ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்கள் இன்று மாலை 5 மணி அளவில் கோவில் ஊழியர் புவனேஸ்வரி என்பவர் கோவிலை திறந்து பார்த்தபோது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார் .
உடனடியாக இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .
இதனை தொடர்ந்து கோவில் செயல் அலுவலர் பொறுப்பு வகிக்கும் வினோத்குமார் மற்றும் கும்பகோணம் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் அஸ்வினி ஆகியோர் சம்பவம் நடைபெற்ற கோவிலில் விசாரணை மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து கோவில் செயல் அலுவலர் பொறுப்பு வைக்கும் வினோத்குமார் கும்பகோணம் நகர கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனை தொடர்ந்து கும்பகோணம் நகர கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் இளையராஜா தலைமையில் காவல்துறையினர் முதல் கட்ட விசாரணை மேற்கொண்டனர்.
கும்பகோணம் காளஹஸ்தீஸ்வரர் ஆலயத்தில் 3 உண்டியல்கள் உள்ளன.
இதில் கொடிமரம் அருகே உள்ள பிரதான உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல் திறந்து 6 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இதில் சுமார் ஒரு லட்ச ரூபாய் அளவிற்கு பணம், நகைகள் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது .
மதியம் ஒரு மணியில் இருந்து மாலை 4 மணிக்குள் கோவிலுக்குள் புகுந்த கொள்ளையர்கள் உண்டியலை கொள்ளையடித்ததுடன் ,கண்காணிப்பு கேமராக்களையும் துண்டித்தும் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் எடுத்துச் சென்றனர் .
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கும்பகோணம் மடத்து தெருவில் உள்ள சிவாலயத்தில் பட்டப் பகலில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் இப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது .
கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சில நாட்களாகவே திருட்டு சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது கும்பகோணம் பகுதி மக்கள் நிம்மதியாக வாழ காவல்துறை கண் விழித்து திருட்டு சம்பவங்களை குறைக்குமா என்பதே பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது
இன்று காலை தனியார் பள்ளியில் 70 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது குறிப்பிடத்தக்கது
