Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

துணை முதல்வர் சொத்து விவரம்- வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.

உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி வாக்காளரான குமாரவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில், கடந்த 2021 ஆம் ஆண்டு தாக்கல் செய்த வேட்பு மனுவில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தில் 7 கோடியே 36 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்ததாக குறிப்பிட்டிருந்த உதயநிதி ஸ்டாலின், நடப்பு தேர்தலில் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில், இந்த விவரங்கள் குறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

அவரது மனைவி ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தில் 2 கோடியே 63 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பரிவர்த்தனை குறித்து முறையான விளக்கங்கள் எதுவும் வேட்பு மனுவில் தெரிவிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.2021 ஆம் ஆண்டு தாக்கல் செய்த வேட்பு மனுவில் 11 கோடியே 6 லட்சம் ரூபாய் ஸ்னோ ஹவுசிங் நிறுவனத்திற்கு கடன் கொடுத்துள்ளதாக குறிப்பிட்டு இருந்த உதயநிதி ஸ்டாலின், 2026 ஆம் ஆண்டு வேட்பு மனுவில் 10 கோடி என குறிப்பிட்டு இருக்கிறார். மீதமுள்ள ஒரு கோடியே 6 லட்சம் பணம் திருப்பி செலுத்தப்பட்டதா என்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டுக்கு முன் 2 கோடி ரூபாய் வருமானம் இருந்ததாக குறிப்பிட்டிருந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது 10 கோடியே 98 லட்சம் ரூபாய் வருமானம் உள்ளதாக குறிப்பிட்டு இருக்கிறார். வருமானம் மற்றும் சொத்து அதிகரித்தது கூறும் குறித்து உரிய விளக்கங்கள் தெரிவிக்கப்படவில்லை எனவும் சொத்து சொத்து குறித்து தவறான முழுமையற்ற தகவல்களை வேட்பாளர்கள் தெரிவிப்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு விரோதமானது என்பதால் இந்த முரண்பாடுகள் குறித்து விசாரணை நடத்த வருமானவரித்துறைக்கும் கம்பெனி விவகாரத் துறைக்கும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ் ஏ தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி அருள்முருகன் அடங்கிய அமர்வில் நாளை (அதாவது இன்று ) விசாரணைக்கு பட்டியலப்பட்டுள்ளது*.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பாக இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
தேர்தல் தொடங்கிவிட்டதனால் இதனை தேர்தல் மனுவாக எடுத்துக்கொள்ள முடியும் என்று தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் உதயநிதியின் சொத்து விவரங்கள் தொடர்பாக ஏப். 20 ஆம் தேதிக்குள் வருமான வரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு அன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!