தமிழக முதல்வர் நலத்திட்டங்கள் மீண்டும் கிடைத்திட உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள் என கரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பிரச்சாரத்தில் பேச்சு.
கரூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தியாகராஜன் நாள்தோறும் காலை முதல் இரவு வரை கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பல்வேறு பகுதிகளுக்கு சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இன்று கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராயனூர், தமிழ் நகர் ,அன்பு நகர் ,தில்

லை நகர் ,எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிக்கு சென்று தீவிரல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் வேட்பாளரை சால்வை அணிவித்து வரவேற்றனர்
ஏராளமான பொதுமக்கள் பூக்கள் தூவி ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
திமுக வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன்

பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பிரச்சார வாகனத்தில் திமுக வேட்பாளர் தியாகராஜன் பேசுகையில்:
கரூர் மாவட்டத்தில் 5500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது அது உங்கள் பகுதிக்கு தார் சாலை,சிமெண்ட் சாலை, நீர் தேக்க தொட்டி, சமுதாயக்கூடம் ,பள்ளிக்கூடம் இப்படி ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து நமது பகுதிக்கு செய்து கொடுத்த தோல்வியை கண்டறியாத உதயசூரியன் செந்தில் பாலாஜி வழியில் நானும் உங்களுக்கு உழைத்திடுவேன் என்று உறுதி அளிக்கிறேன் தமிழக முதல்வர் நலத்திட்டங்கள் மீண்டும் கிடைத்திட உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து என்னை பெரியவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் எனக் கூறினார்.
