பட்டுக்கோட்டை அருகே உள்ள 320 ஏக்கர் பரப்பளவு கொண்ட புதுக்கோட்டை உள்ளூர் செல்லிக்குறிச்சி ஏரியில் மெகா பவுண்டேஷன் நிர்மல் குமார் மூலம் தூர்வாரும் பணி துவக்கம்.
ஏரியின் உள்ளே செல்லும் உயர் மின்னழுத்த கோபுரங்களையும், மின்சாரக் கம்பங்களையும் ஏரிக்கு வெளியே கொண்டு செல்ல அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள 320 ஏக்கர் பரப்பளவு கொண்ட புதுக்கோட்டை உள்ளூர் செல்லிக்குறிச்சி ஏரியில் மெகா பவுண்டேஷன் நிர்மல் குமார் மூலம் தூர்வாரும் பணி இன்று மாலை துவங்கப்பட்டது. செல்லிக்குறிச்சி ஏரியின் பரப்பளவு, ஏரியின் நீளம் சுமார் 5 கி.மீ. என்றும் கூறப்படுகிறது.
செல்லிக்குறிச்சி ஏரியைச் சுற்றியுள்ள முக்கிய கிராமங்கள் புதுக்கோட்டை உள்ளூர் செல்லி குறிச்சி, மளவவேனிற்காடு தொக்காளிக்காடு, மாளியக்காடு சேண்டாக்கோட்டை, முதல்சேரி, பள்ளிகொண்டன், செட்டியக்காடு பொன்னவராயன்கோட்டை, அணைக்காடு, பழஞ்சூர் உள்ளிட்ட கிராமங்கள் இந்த நீராதாரத்தை பயன்படுத்துகின்றனர்.
செல்லிக்குறிச்சி ஏரியை முறையாக தூர்வாரி, வரத்து வாய்க்கால்களையும் சீரமைத்தால், நீர் சேமிப்பு திறன் அதிகரிக்கும் – வண்டல் மண் அகற்றப்படுவதால் ஏரியில் அதிக மழைநீரை சேமிக்க முடியும். நிலத்தடி நீர்மட்டம் உயரும், ஏரியைச் சுற்றியுள்ள கிராமங்களில் கிணறு, ஆழ்துளைக் கிணறுகளில் நீர்மட்டம் உயரும், பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், சமீப காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து நீரின் தரமும் உப்பு தன்மையாக மாறி வருகிறது.
இந்த ஏரி தூர்வாரி சுத்தப்படுத்தி நீர் சேமிக்கும் பொழுது நீர் ஆதாரம் பெருகி நீரின் தரம் உயரும் என்று மெகா பவுண்டேஷன் நிறுவன நிர்மல் குமார் கூறுகின்றார். பெரும் போராட்டத்திற்கு பிறகு இந்த ஏரியை, தூர்வார அனுமதி கிடைத்த பொழுதும், கடந்த ஒராண்டாக தண்ணீர் நிரம்பி இருந்ததால் ஏரியை சுத்தப்படுத்த முடியவில்லை என்றும், இப்பொழுது நீரின்றி வறண்டு கிடப்பதால் ஏரியை சுத்தப்படுத்தி இதே நாள் அடுத்த ஆண்டு, இந்த ஏரியின் முழு கொள்ளளவுடன் தண்ணீர் நிரப்பி தருவோம் என்று உறுதியளித்தார்.
இந்த ஏரியை ஒரு மீட்டர் ஆழப்படுத்தி, கரையை ஒரு மீட்டர் உயர்த்தி தண்ணீர் நிரப்பும் பொழுது
320 ஏக்கர் ஏரியை சராசரியாக 2 மீட்டர் அளவில் தண்ணீர் நிரம்பும் பொழுது , சுமார் 25.9 லட்சம் கன மீட்டர் அல்லது 259 கோடி லிட்டர் கூடுதல் நீர் சேமிக்கும் கொள்ளளவு கிடைக்கும் என்றும், தமிழக அரசின் சுற்றுலாத்துறை தனி கவனம் செலுத்தி ஆதரவளிக்கும் பொழுது இதனை ஒரு சுற்றுலா தளமாக மேம்படுத்த முடியும் என்றும், அதற்கு முன்னதாக ஏரியின் உள்ளே செல்லும் உயர் மின்னழுத்த கோபுரங்களையும், மின்சாரக் கம்பங்களையும் ஏரிக்கு வெளியே கொண்டு செல்ல அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
