Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் மாரியம்மன் கோவிலில் அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருக்காம்புலியூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

விழாவை முன்னிட்டு நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. நேற்று காவிரி ஆற்றில் இருந்து புனித தீர்த்தம் எடுத்துவரப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு

அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இன்று திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்தல், அலகு குத்துதல், பால்குடம் எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். பின்னர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

வைகாசி திருவிழாவை முன்னிட்டு திருக்காம்புலியூர் மகா மாரியம்மன் ஆலயத்தில் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

error: Content is protected !!