நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம், ‘பைசன்’ பட வெற்றிக்குப் பிறகு தனது 4-வது படமான ‘ஜாக்கி’யில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை கரண் அரவிந்த் குமார் இயக்குகிறார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ரொமாண்டிக் – ஆக்சன் திரைப்படமாக உருவாகும் ‘ஜாக்கி’யின் டைட்டில் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் மூவ் புரோமோ வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
துருவ் விக்ரமின் ‘ஜாக்கி’ டைட்டில் வெளியீடு
