உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரேமானந்த் மகாராஜின் ஆசிரமத்தை பிரபலப்படுத்துவதற்காக கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரூ.5 கோடி கட்டணம் பெற்றுக்கொண்டு அங்கு சென்று வந்ததாக சமூக வலைதளங்களில் புகார்கள் எழுந்தன. இந்நிலையில், இது முற்றிலும் பொய்யான தகவல் என்று விராட் கோலி தரப்பு தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், எந்தவித பண பலனுக்காகவும் அல்லாமல், தனது ஆன்மீக நம்பிக்கை மற்றும் மரியாதையின் காரணமாகவே ஆன்மீக குரு பிரேமானந்த் மகாராஜை நேரில் தரிசித்து வருவதாக கோலி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஆசிரமத்தை பிரபலப்படுத்த ரூ.5 கோடி பெற்ற விராட் கோலி?
