Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருப்பத்தூர் மலைக் கிராமங்களில் டிஐஜி மூர்த்தி ஆய்வு!

திருப்பத்தூர் மலைக் கிராமங்களில் டிஐஜி மூர்த்தி ஆய்வு!

திருப்பத்தூர் மாவட்டம், புதூர்நாடு மலைப் பகுதியில் உள்ள கிராமங்களில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஐஜி மூர்த்தி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

மேலும் புதூர்நாடு பகுதியில் நேற்று தொடங்கிய இந்த ஆய்வு மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக, சாராயம் காய்ச்சுதல் மற்றும் சட்டவிரோதமாக மதுபாட்டில்களைப் பதுக்கி விற்பனை செய்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களைத் தடுப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், புதூர்நாடு மற்றும் அதன் சுற்றுவட்டார மலைக் கிராமங்களில் மதுவிலக்கு தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டு, காவல் நிலையங்களின் செயல்பாடுகள் மற்றும் சட்டவிரோத மதுபான விற்பனையைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது, மலைக் கிராமங்களில் வசிக்கும் மக்களின் வாழ்வாதார நிலைகள் குறித்தும் டிஐஜி மூர்த்தி விசாரணை நடத்தினார்.

இந்த ஆய்வின்போது மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் பாபு உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.

error: Content is protected !!