Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஈரோட்டில் வீட்டை விட்டு வெளியேறிய 2 சிறுவர்கள் தஞ்சையில் போலீஸ் மீட்பு!

ஈரோட்டில் வீட்டை விட்டு வெளியேறிய 2 சிறுவர்கள் போலீசாரால் மீட்பு!

ஈரோட்டில் வீட்டில் கோபித்துக் கொண்டு வெளியேறிய சிறுவர்கள் 2 பேரை ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.பி. தனிப்பிரிவு தலைமைக்காவலர் மீட்டு வல்லம் போலீசில் ஒப்படைத்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் மாப்பிள்ளைநாயக்கன்பட்டியில் பகுதியில் நேற்று 28ம் தேதி எஸ்.பி., தனிப்பிரிவு தலைமைக்காவலர் சையது அலி ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அப்பகுதியில் 2 சிறுவர்கள் சுற்றித்திரிவதாக பொதுமக்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர். இதையது;து தலைமைக்காவலர் சையது அலி அந்த 2 சிறுவர்களை தேடிப்பார்த்துள்ளார். அப்போது மாப்பிள்ளைநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஒரு கடையில் அருகில் 2 சிறுவர்கள் சுற்றித்திரிவதை கண்டு அவர்களை அழைத்து விசாரித்துள்ளார்.

ஈரோடு, ராயபாளையம், சித்தோடு நான்கு ரோடு பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் ஸ்ரீதர் (13), ஈரோடு, குமளமருப்பு காலனி, சித்தோடு நான்கு ரோடு பகுதியை சேர்ந்த செங்கோட்டையன் மகன் ஸ்ரீ லட்சுமணன் (14) என்பது தெரிய வந்தது. மேலும் இருவரும் நண்பர்கள் என்பதும், இருவரும் கடந்த 27ம் தேதி மாலை வீட்டில் பெற்றோரிடம் கோபித்து கொண்டு தஞ்சை பகுதிக்கு வந்ததும் தெரியவந்தது. மேலும் ஈரோட்டில் இரண்டு சிறுவர்களின் பெற்றோர் போலீசில் புகார் செய்துள்ளதும் தெரிய வந்தது.

இதையடுத்து தலைமைக்காவலர் சையது அலி இரண்டு சிறுவர்களையும் அழைத்து வந்து வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். தொடர்ந்து அனைத்து மகளிர் போலீசார் ஈரோடு போலீசாருக்கு தகவல் அளித்தனர். பின்னர் இரு சிறுவர்களையும் ஈரோடுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

error: Content is protected !!