தமிழக கோயில்களின் கார் பார்க்கிங் வசதிகளுக்கு இனி டிஜிட்டல் முறையில் மட்டுமே கட்டண பில்கள் வழங்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். மேலும், அறநிலையத்துறையின் அனைத்து வகையான டெண்டர்களும் வெளிப்படைத்தன்மையுடன் இனி ஆன்லைன் முறையிலேயே மட்டுமே நடைபெறும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். பழனி விவகாரத்தில் அரசியல் சுயலாப காரணங்களுக்காகவே தன் மீது வீணான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
