திண்டுக்கல் லியோனி ஒரு சிறந்த பட்டிமன்ற நடுவர் என்பதால், அரசியல் கருத்துக்களை பாமர மக்களுக்கும் புரியும் வகையில் பாடல்கள் வழியாகவும், நகைச்சுவை கலந்த பேச்சுகள் மூலமாகவும் கொண்டு சேர்ப்பதில் வல்லவர்.
பழைய மற்றும் புதிய திரைப்படப் பாடல்களின் மெட்டைப் பயன்படுத்தி, அதில் ஆளுங்கட்சியின் குறைகளையும், தனது கூட்டணியின் சாதனைகளையும் வரிகளாக மாற்றிப் திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் பாட்டு பாடி வாக்கு சேகரித்த திண்டுக்கல் லியோனி.
திருவெறும்பூர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தொழிலாளர்களின் நிலையை முன்வைத்து தனது பேச்சுகளால் வாக்கு சேகரித்தார்.
திருவெறும்பூர் தொகுதியின் திமுக வேட்பாளரான அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஆதரவாக அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வெயில் மற்றும் சோர்வைப் பொருட்படுத்தாமல், மக்கள் கூடும் இடங்களில் தனது கணீரென்ற குரலில் பாடி, கூட்டத்தை தன் வசம் ஈர்த்தார். மத்திய மற்றும் மாநில அரசுகளின் செயல்பாடுகளைத் தனது பாணியில் கிண்டல் செய்து, வாக்காளர்களைச் சிந்திக்க வைத்தார்.
