Skip to content
Home » விக்னேஷ் சிவனுக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் எஸ்எஸ்.குமரன் –

விக்னேஷ் சிவனுக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் எஸ்எஸ்.குமரன் –

விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்துக்கு ‘எல்ஐசி’ என்று, தன்னுடைய படத்தின் தலைப்பை வைத்திருப்பதாகக் கூறி இயக்குநர் எஸ்.எஸ்.குமரன் கொதித்து எழுந்திருக்கிறார். ’எல்ஐசி’ என்ற தலைப்பை தான் பதிவு செய்து வைத்திருப்பதால் அதை விக்னேஷ் சிவன் எந்த விதத்திலும் பயன்படுத்தக்கூடாது என்று சொல்லி இருக்கும் எஸ்.எஸ்.குமரன், “மீறி பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விக்னேஷ் சிவன் செய்திருக்கும் இந்தச் செயல் தனக்கு அதிர்ச்சியையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியிருப்பதாக தனது அறிக்கையில் தெரிவித்திருக்கும் எஸ்.எஸ்.குமரன், எல்ஐசி என்கிற படத் தலைப்பை 2015-ம் ஆண்டே தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் பதிவு செய்து வைத்திருப்பதாகவும் குமரன் கூறியுள்ளார்.
எஸ்.எஸ்.குமரன்
எஸ்.எஸ்.குமரன்
இதை அறிந்த விக்னேஷ் சிவன் தன்னுடைய படத்திற்கு அந்தப் பெயரைத் தரக்கோரி அணுகியதாகவும், ஆனால் தன்னுடைய படத்துக்கு அதுசரியாக பொருந்துவதால் தர மறுத்து விட்டதாகவும் குமரன் தெரிவித்துள்ளார். “இந்தத் தலைப்பு என்னுடையது என்று தெரிந்தும் விக்னேஷ் சிவன் அதை தனது படத்துக்குப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது” என்றும் எஸ்.எஸ்.குமரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!