இந்தியா – இங்கிலாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அமல்: கரூரிலிருந்து இரண்டு கோடி மதிப்பீட்டில் முதல் ஏற்றுமதி சரக்குகள் அனுப்பும் பணி கொடியசைத்து தொடக்கம்.
இந்தியா – இங்கிலாந்து இடையேயான சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (India–UK FTA) அமலுக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து, கடந்த நாட்களில் 8 முதல் 12 சதவீத இருந்த வரி தற்போது ஜீரோ சதவீதம் வரி குறைக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் கரூரிலிருந்து இங்கிலாந்துக்கு இன்று இரண்டு கோடி மதிப்பில் முதல் ஏற்றுமதி சரக்குகள் அனுப்பி வைக்கப்பட்டது.
கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் கரூர் அண்ணா சாலை பகுதியில் இருந்து முதல் ஏற்றுமதி சரக்கு வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர்

முத்துக்குமரன் மற்றும் கோயம்புத்தூர் இணை வெளிநாட்டு வர்த்தக இயக்குனர் ஸ்ரீதர் (JDGFT) ஆகியோர் கொடி அசைத்து நான்கு கண்டனர் லாரிகளை தொடங்கி வைத்தனர்.
இன்று 2 கோடி மதிப்பிலான சரக்குகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் வரும் 15 நாட்களுக்குள் 20 கோடி ரூபாய் மதிப்பில் சரக்குகள் அனுப்பப்பட உள்ளது என்று தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இந்திய ஏற்றுமதியாளர்களுக்குக் கூடுதல் சுங்கவரி சலுகைகள் கிடைக்கப் பெறுவதுடன், சர்வதேச சந்தையில் இந்தியாவின் போட்டித்திறன் மற்றும் புதிய வணிக வாய்ப்புகள் பெருமளவில் அதிகரிக்கும். இந்தியாவின் மிக முக்கிய வீட்டு உபயோக ஜவுளி (Home Textile) ஏற்றுமதி மையமாகத் திகழும் கரூர் மாநகரத்திற்கு, இந்த ஒப்பந்தம் ஒரு புதிய அசுர வளர்ச்சிப் பாதையை உருவாக்கக் கூடிய வகையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
