திருச்சி கண்டோன்மென்ட் போக்குவரத்து பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அரசு. இவர் ஆர் எஸ் புரம் ஜங்ஷனில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நடந்த பிரச்சாரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் பிரச்சாரத்திற்கு வந்த தமிழக வெற்றி கழகப் பெண் தொண்டர்கள் 3 பேர் அவரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் அரசு திருச்சி ஏர்போர்ட் போலீசில் புகார் செய்தார் அதன் பெயரில் போலீசார் பெண் தொண்டர்கள் மூன்று பேர் மீதும் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
