தமிழக ரேஷன் கடைகளில் அரிசி கார்டுதாரர்களுக்கு மேம்படுத்தப்பட்ட தரத்திலான அரிசியை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது புழுங்கல் அரிசியில் 16%, பச்சரிசியில் 25% வரை உடைந்த அரிசி இருக்க அனுமதி உள்ள நிலையில், இனி புழுங்கல் அரிசியில் 5%, பச்சரிசியில் 10% மட்டுமே உடைந்த அரிசி இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட அரிசி விநியோகம் ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களில் சோதனை அடிப்படையில் தொடங்கி, அடுத்த ஆண்டு முதல் தமிழகத்தில் அமலுக்கு வருகிறது.
தமிழக ரேஷன் கடைகளில் தரம் உயர்ந்த அரிசி விநியோகம்
