Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் மாவட்ட அளவிலான கபடி போட்டி… அரசு பள்ளி மாணவிகள் சாதனை

திருச்சியில் மாவட்ட அளவிலான கபடி போட்டி... அரசு பள்ளி மாணவிகள் சாதனை

திருச்சிராப்பள்ளி வருவாய் மாவட்ட அளவிலான கபடி போட்டி துறையூர் வட்டம் பெருமாள் பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இப் போட்டியில் கலந்து கொண்ட காட்டூர் ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். மேலும் அவர்கள் மாநில அளவிலான கபடி போட்டியில் கலந்து கொள்வதற்கு தகுதி பெற்றுள்ளனர். மேலும் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் கலந்து கொண்ட அணி வருவாய் மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பிடித்து சாதித்துள்ளனர் மாவட்ட அளவில் நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில்பன்னிரண்டாம் வகுப்பு மாணவி நிரஞ்சனாமுதலிடம் பெற்று மாநில அளவில் நடைபெற கூடிய போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.அதேபோன்று ஏழாம் வகுப்பு பயிலும் அனிஷா பேகம் என்ற மாணவி 100 மீட்டர் உயரம் தாண்டுதல் நூறு மீட்டர் ஓட்டபந்தயம்

தடகளப் போட்டியில் மாவட்ட அளவில் விளையாட தேர்வு பெற்றுள்ளார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அப்துல் ஜாபர் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் ஆப் திருச்சி கிளவுட்ஸ் தலைவர்
அஸ்லம்,முன்னாள் மாணவர் எல்லைக்குடி அன்புராஜ், பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் எஸ் எஸ் ரஹமத்துல்லா, மாணவர் எல்லைக்குடி அன்புராஜ் ,பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் எஸ் எஸ் ரஹமத்துல்லா, கபடி பயிற்சியாளர்கள் ராம் விளாஸ்வான், லோகேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!