நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்) மற்றும் ஆர்த்தி ஆகியோரின் விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த உத்தரவு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
ஆர்த்திக்கு எதிராக ரவி மோகன் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. ரவி மோகனிடம் இருந்து இடைக்கால ஜீவனாம்சம் கோரி ஆர்த்தி வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை 2 வாரத்திற்குள் விசாரித்து முடிக்க குடும்பநல கோர்ட் உத்தரவிட்டிருந்தது. காலக்கெடுவை நீட்டிக்குமாறு ரவி மோகன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட், எக்காரணம் கொண்டும் காலக்கெடுவை நீட்டிக்க முடியாது என தெரிவித்துள்ளது.
