தீபாவளி விடுமுறை முடிந்து பணியிடங்களுக்கு திரும்பிய பொதுமக்கள் – ரயில், பேருந்து நிலையங்களில் விடிய விடிய நிரம்பி வழிந்த மக்கள் கூட்டம்
தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்தப் பண்டிகையொட்டி பொதுமக்களின் நலன் கருதி வேலை நாளான நேற்று திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து நேற்று விடுமுறை முடிந்து பணியிடங்களுக்கு செல்வதற்காக திருச்சி மாவட்ட பொதுமக்கள் ஊர் திரும்பினர் இதனால் நேற்று இரவு ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த மக்கள் கூட்டம் விடிய விடிய காணப்பட்டது.
தீபாவளி விடுமுறை முடிந்து நேற்று பிற்பகல் முதல் திருச்சி மாவட்ட மக்கள் அவரவர் பணியிடங்களுக்கு திரும்பத் தொடங்கினர். இதனால் திருச்சி மாவட்ட சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகம் இருந்தது. திருச்சி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், ஜங்சன் ரயில் நிலையம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களி, ரயில் நிலையங்களில் வெளியூர் செல்ல மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. பஞ்சப்பூர் பேருந்து முனையத்திலும், ஜங்சன் ரயில் நிலையத்திலும் சென்னை, பெங்களூரு, கோயம்புத்தூர் போன்ற தொலைதூர ஊர்களுக்கு செல்லும் பேருந்து, ரயில்களில் செல்ல மக்கள் கூட்டம் அலைமோதியது.
பணியிடங்களுக்கு திரும்பும் பொதுமக்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் திருச்சியிலிருந்து கூடுதல் பேருந்துகள், தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. வழக்கமாக பஞ்சப்பூர் பஸ் நிலையத்தில் இருந்து வழக்கமாக 815 பஸ்கள்
இயக்கப்படும் தீபாவளி பண்டிகை நிறைவேற்றி நேற்று கூடுதலாக 650 பஸ்கள் இயக்கப்பட்டன. அதேபோன்று சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன.
உறையூர் பகுதி கடைகளில் தொடர் திருட்டு-
சி.சி.டி.வி. கேமராவில் சிக்கிய பலே திருடன் சிக்குவாரா?
உறையூர் திருத்தாந்தோணி ரோடு, வாலாஜா ரோடு, மாதங்கொல்லை தெரு உள்ளிட்ட இடங்களில் பல கடைகளில் தொடர்ந்து பூட்டுக்கள் உடைக்கப்பட்டு பணம், பொருள்கள் திருடப்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர்
தீபாவளியன்று உறையர் பெரிய சவுராஷ்ட்ரா தெருவில் டீக்கடை பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. முகமூடி அணிந்த ஒரு திருடன் டீக்கடையின் பூட்டை உடைத்து கல்லா பெட்டியை திறந்தான். பின்னர் பணம் எதுவும் சிக்காததால் ஏமாற்றத்துடன் வெளியே சென்றான்.
இவை அனைத்தும் கடையில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகி இருந்தது. பின்னர் அந்த திருடன் பக்கத்தில் உள்ள எலக்ட்ரிக்கல் கடை ஷட்டரை துாக்கி உள்ளே சென்று அங்கிருந்த குறைந்த அளவிலான பணத்தை திருடி சென்று விட்டான். அங்கிருந்து சில மீட்டர் துாரத்தில் உள்ள ஜெயந்தி பஸ் ஸ்டாப் அருகில் உள்ள ஒரு ஜெனரல் மர்ச்சண்ட் கடை பூட்டும் உடைக்கப்பட்டு திருட்டு முயற்சி நடந்துள்ளது. இதேபோல 2 நாட்களுக்கு முன்பு திருத்தாந்தோணி ரோடு பகுதியில் உள்ள மளிகை கடையின் கதவு உடைக்கப்பட்டு திருட்டு நடந்தது மூன்று நாட்களுக்கு முன்பு வடக்கு மாதளங்கொல்லை தெருவில் உள்ள வீட்டின் முன்பக்க கதவை உடைத்து திருடர்கள் அங்கிருந்து யுபிஎஸ் கருவியின் பேட்டரியை துாக்கி சென்று விட்டனர். அதேபோல வாலாஜ ரோடின் ஒரு கடை கதவை உடைக்க முயன்று முடியாமல் போகவே திருடர்கள் ஓடி விட்டனர். இவ்வாறு உறையூர் பகுதியில் தொடர் திருட்டுக்கள் நடப்பதால் இந்த பகுதியில் உள்ள மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.போலீஸ் வாகனங்கள் எப்போதாவது ரோந்து வருகிறது. ஆகவே சுழற்சி முறையில் போலீஸ் ரோந்து வாகனங்கள் அதிகம் பிரச்சனைகள் ஏற்படும் இந்த பகுதிகளில் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் டீக்கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் கடைக்குள் நுழைபவரின் முகம் தெளிவாக தெரிகிறது.
இந்த பலே திருடனுக்கு அப்பகுதியில் நடைபெற்ற பெரும்பாலான திருட்டு சம்பவங்களில் தொடர்பு இருக்கலாம் என பொதுமக்கள் சந்தேகிக்கின்றனர்
ஆகவே அந்தத் திருடனை விரைந்து பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
