அண்ணா அறிவாலயத்தில் திமுக துணை பொது செயலாளர் கனிமொழி பேட்டி
எதிர்க்கட்சிகள் சட்டம் ஒழுங்கை பற்றி கூறும் பொழுது, அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர் வளர்ச்சியை பற்றி பேசுவது போல சென்ற ஆண்டு இந்த ஆண்டு என்று கூறுகிறார்
இதனை சரி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கூட அவர்களுக்கு இல்லை
தங்களை நியாயப்படுத்திக் கொள்ளத்தான் குறிக்கோளாக இருக்கிறார்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு ஆபத்தான விஷயங்களை தான் நீங்கள் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள்
பாதிக்கப்பட்டவர் துணை சபாநாயகர் வீட்டிற்கு அழைத்துச் சென்று மிரட்டுவதாக வீடியோ பார்த்தோம்
அவர்களை எதிர்த்து குற்றம் சுமத்துவர்கள் மீது மிரட்டல்கள் கைது நடவடிக்கைகள் செய்கிறார்கள்
மாவட்ட ஆட்சியருக்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லை என்றால் பிறகு கூடுதலாக ஏன் காவல்துறை அதிகாரியை நியமித்திருக்கிறார்கள்
நாங்கள் ஆட்சிக்கு வந்தோம் என்றால் தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் குழந்தைகளுக்கு ராணுவத்தில் அளிக்கப்படும் பாதுகாப்பு போல் அளிப்போம் என்று கூறினார் ஆனால் இன்று நடப்பது என்ன, குழந்தைகள் பெண்கள் வயதானவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகித்தான் வருகிறார்கள், இவர் ராணுவத்தை அழைத்து பாதுகாப்பு தரவில்லை மாறாக தமிழ்நாட்டிற்கு எதிராக ராணுவத்தை கூட்டி வருவது போல தாவே காவினர் தற்போது சூறையாடி கொண்டிருக்கிறார்கள்
ஆறு மாத ஆட்சியைப் பற்றி கூற வேண்டும் என்றால் இனியாவது பல்வேறு விஷயங்களில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும், பொறுப்போடு செயல்பட வேண்டும் என்றார்.
