தேசிய முற்போக்கு திராவிட கழகம் கோவை தெற்கு மாவட்டம் குறிச்சி பகுதி கழகம் தேமுதிக அலுவலகம் திறப்பு விழா மற்றும் 2000 பேருக்கு அன்னதானம் வழங்கும் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் தேமுதிகவின் இளந்தலைவர் இளைய கேப்டன் வி. விஜயபிரபாகரன் குறிச்சி பகுதியில் அமைக்கபட்டுள்ள தேமுதிக அலுவலகத்தை திறந்து வைத்து கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார் மேலும் அதன் பிறகு 2000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார். அதன் பின்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கிய அவர், சிறப்புரையாற்றினார். இந்த விழாவில் தேமுதிக தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர், மாநில மகளிர் அணி துணை செயலாளர் வனிதாதுரை தலைமையில்
நடைபெற்ற இந்த விழாவில் தெற்கு மாவட்ட கழக துனை செயலாளர் ரவிசந்திரன் வரவேற்புரை ஆற்றினார் மற்றும் குறிச்சி பகுதி செயலாளர் சின்னசேட்,அவைத்தலைவர் LJJ.ஜெகன், பொருலாளர் முருகேசன்,பொதுக்குழு உறுப்பினர்கள் அய்யாசாமி, விக்ரம் வலைதள அணி ரமணாஜோசப்,அன்னதானம் ஏற்பாடு முருகன்,மதிவாணன், மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் திரு. M.S. கிட்டு, முருகராஜ்,மாநகர் மாவட்ட செயலாளர் சிங்கைkசந்துரு,வடக்கு மாவட்ட செயலாளர் திரு. K.S. சண்முகவடிவேல், கனகாஜ்,சுரேஷ்,தனலட்சுமி,
முருகானந்தம், முருகன்,மருதப்பன் திரு. K.K. சாமி, மணிகண்டன், இப்ராஹிம், தவசிதனபால் மற்றும் வடிவேல் கலந்துகொண்டனர் மேலும் இளைய கேப்டன் விஜய பிரபாகரன் பேசும்போது :-*
தேசிய முற்போக்கு கழகத்தின் சார்பாக , பொதுமக்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், கோவையில் நடைபெறுவதை போன்று, முப்பெரும் விழா தமிழக முழுவதும் நடைபெறும். கடந்த தேர்தல்களில் மக்கள் எங்களை ஜெயிக்க வைக்கவில்லை என்றாலும், கேப்டன் சொன்னதைப் போன்று மக்கள் முன் தான் நாங்கள் வந்து நிற்போம். கேப்டன் உயிருடன் இருக்கும் போது அவரை யாரும் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் கேப்டன் மறைந்து ஒரு வருடம் ஆகிறது, ஆனால் இன்னமும் நான் செல்லும் ஊர்களில் முதலில் கேட்பது கேப்டனை பற்றி மட்டும்தான். குறிப்பாக பெண்கள் தான் கேப்டனை பற்றி அதிகம் விசாரிக்கிறார்கள், இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம் ஒவ்வொரு வீட்டிலும் கேப்டன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்று. கேப்டன் விட்டு சென்றாலும், அவருடைய மகன்கள் ஆன நானும் என்னுடைய சகோதரனும் கட்சிக்காகவும், மக்களுக்காகவும் பாடுபடுவோம். என்னுடைய கனவுகள் அத்தனையையும் தூக்கி எறிந்து விட்டு, என் அரசியலுக்கு வந்தேன் என்றால், என் தந்தையை இந்த மக்கள் தங்கத்தட்டில் வைத்து தாங்குவதால் தான், அவருடைய கொள்கைகளை காப்பாற்றுவதற்காக நாம் நிற்கிறேன். நான் என்னுடைய தாய் தந்தையின் கனவை நிறைவேற்றுவது போலவே, பொது மக்களின் கனவை நிறைவேற்றுவதற்காக இந்த அரசியல் மேடையில் நிற்கிறேன். எனக்கு எம்.எல்.ஏ, எம்.பி போன்ற பதவிகளுக்காக நான் வரவில்லை, எனக்கு கேப்டனின் மகன் என்ற பதவியே போதும், அதனால் நான் என்னை அறிமுகப்படுத்திக் கொள்வதற்காக அரசியல் மேடைக்கு வரவில்லை. தே.மு.தி.க சார்ந்த நிறைய மக்கள் இருக்கிறார்கள், உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள் அவர்களை மேலே எழுப்ப வேண்டும், அந்தப் பணியை என்னுடைய தந்தை என்னிடம் ஒப்படைத்துச் சென்று இருக்கிறார். இந்தக் கட்சிக்காக உழைக்கிறவர்கள் ஜெயிக்க வேண்டும். ஒவ்வொரு தேர்தலிலும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை சுற்றி தான் அரசியலே நடக்கிறது. முதலில் தேமுதிக எந்த கூட்டணிக்கு செல்கிறார்கள் என்பதைத்தான் அனைவரும் பார்ப்பார்கள். கட்சி ஆரம்பித்தால் மற்றவர்களின் சொத்து மேலே உயரும், ஆனால் தேமுதிக ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து சொந்த காசிலே கட்சியை நடத்தப்பட்டு கொண்டு இருக்கிறது. கட்சி மட்டுமல்ல தேமுதிகவில் இருக்கும் ஒவ்வொரு தொண்டனுமே அப்படித்தான் எனக் கூறினார்.
இதில் தேமுதிக தொண்டர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.