கரூர் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற (தனி) தொகுதி திமுக வேட்பாளர் ராஜா காணியாளம்பட்டி டீக்கடையில் டீ ஆத்தி பொதுமக்களுக்கு வழங்கி உதயசூரியனுக்கு வாக்கு சேகரிப்பு.
தமிழகத்தில் வருகின்ற 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் களத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற (தனி) தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக சார்பில் போட்டியிடும் ராஜா கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட

காணியாளம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு சென்று பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார்.
அப்போது காணியாளம்பட்டி பகுதியில் உள்ள டீக்கடையில் திமுக வேட்பாளர் ராஜா டி ஆத்தி

பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு வழங்கி பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
