Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் திமுக வேட்பாளர் நெரூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு- பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தியாகராஜன் நாள்தோறும் காலை மாலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், கரூர் நெரூர் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு நேரடியாக சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார் அப்போது கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

வேட்பாளர் தியாகராஜன் பொதுமக்களிடம் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள், பெண்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை, மாணவர்களுக்கான கல்வி உதவித் திட்டங்கள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து மீண்டும் திமுக அரசை அமைக்க ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டார்.

வெங்கமேடு பகுதியில் பெண்கள் மற்றும் இளைஞர்கள் திரளாக கூடி வேட்பாளருக்கு மலர் தூவி, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். சில இடங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்து பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர் .

பொதுமக்களிடம் நேரடியாக சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பகுதி வளர்ச்சிக்கான புதிய திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்றும் வேட்பாளர் உறுதியளித்தார்.

error: Content is protected !!