Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாபநாசம் அருகே பரபரப்பு: த.வெ.க நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு – திமுக நிர்வாகிக்கு போலீஸ் வலைவீச்சு

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதி பூண்டி ஊராட்சி தோப்புத்தெருவில் வசித்து வருபவர் வேலாயுதம் (42) . இவர் தமிழக வெற்றி கழகத்தின் பூண்டி கிளை பொருளாளராக இருந்து வருகிறார். அப்பகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிவற்ற நிலையில், பூண்டி தோப்புத்தெரு அருகே தவெக பிரமுகர் வேலாயுதம் நடந்து சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகி விசில் சின்னத்திற்கு அதிக வாக்குகள் பெறுவதற்கு வேலாயுதம் வேலை செய்தது தான் காரணம் எனக் கூறி ஆத்திரத்தில் திமுக பிரமுகர் வேலாயுதத்தை அரிவாளால் தலையில் வெட்டிவிட்டு ஓடிவிட்டார்.

இதில் வேலாயுதம் சம்பவ இடத்திலேயே ரத்த காயங்களுடன் கீழே சரிந்து விழுந்தார். படுகாயம் அடைந்த அவரை அவசர சிகிச்சைக்காக 108-ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவம் இடத்திற்கு சென்ற அம்மாபேட்டை போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு, வழக்கு பதிவு செய்து அரிவாளால் வெட்டிய திமுக பிரமுகரை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!