Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஓரணியில் தமிழ்நாடு: தி.மு.க. ஐ.டி. விங் பயிற்சி முகாம் தொடங்கியது

திமுக  தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின்  அறிவித்துள்ள ‘ஓரணியில் தமிழ்நாடு’- உறுப்பினர் சேர்க்கை பரப்புரையின் தொடக்கமாக, புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதற்கான செயலியின் விவரங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் பயிற்சி அரங்கு  இன்று புதன்கிழமை காலை 10 மணியளவில் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடந்தது.தி.முக. அமைப்புச் செயலாளர் .ஆர்.எஸ்.பாரதி  இந்த பயிற்சி அரங்கை தொடங்கி வைத்தார். தகவல் தொடர்பு அணிச் செயலாளர் அமைச்சர்  டி.ஆர்.பி.ராஜா  தலைமையில் பயிற்சி முகாம் நடைபெற்றது.தமிழ்நாடு முழுவதுமுள்ள தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் இதில் பங்கேற்றனா். இவர்கள் மூலம் ஒவ்வொரு தொகுதியிலும் வாக்குச்சாவடி வாரியாக உள்ள சமூக வலைத்தள உறுப்பினர்களுக்கு ஜூன் 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் பயிற்சி அளிக்கப்பட்டு, ஜூலை 1ந் தேதி  முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின்  தொடங்கிவைக்க உள்ள ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்ப்பு நிகழ்வு, இந்த செயலி வாயிலாக மேற்கொள்ளப்படும்.
error: Content is protected !!