திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மிசா சிறைவாசம் குறித்து தவெக அமைச்சர் நிர்மல்குமார் அவதூறாக பேசியதாக கூறி, அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக சார்பில் டிஜிபி அலுவலகத்தில் அக்கட்சியின் திருச்சி எம்.பி சிவா இன்று (செப்.16) புகார் அளித்துள்ளார். புகாரளித்த பின் பேட்டியளித்த அவர், அமைச்சராக பொறுப்பில் இருக்கக்கூடிய ஒருவர் எவ்வித ஆதாரமுமின்றி எல்லை மீறி பேசுவது ஏற்புடையதல்ல என்று கண்டனம் தெரிவித்தார்.
