Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

7ம் தேதி கருணாநிதி நினைவு தினம்….. ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி

முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி  2018 ஆகஸ்ட் 7ம் தேதி மறைந்தார். அவரது 6ம் ஆண்டு நினைவு தினம் வரும் 7ம் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி அன்று காலை 7மணிக்கு  சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் இருந்து  திமுகவினர் அமைதிப்பேரணி நடத்துகிறார்கள்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் பேரணியாக  கருணாநிதி நினைவிடம் சென்று  மரியாதை செலுத்துகிறார்கள். இதில்  அமைச்சர்கள் , எம்.பி, எம்எல்ஏக்கள் உள்பட கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள்.  இதில் அனைவரும் கலந்து கொள்ளும்படி திமுக சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!