கரூர் சட்டமன்ற தொகுதியில் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ஆசி தியாகராஜனை வெற்றி பெற செய்ய நாம் அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரரும் கரூர் திமுக தேர்தல் பொறுப்பாளருமான அசோக் குமார் வேண்டுகோள்
தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி நடைபெறுவதை ஒட்டி தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் கரூர் சட்டமன்ற திமுக வேட்பாளர் ஆசி எம் தியாகராஜனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரரும், கரூர் திமுக தேர்தல் பொறுப்பாளருமான

அசோக்குமார் நாள்தோறும் பல்வேறு இடங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் இன்று ராமகிருஷ்ணபுரம்,செங்குந்தபுரம், கேவிபி நகர், காமராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திமுக வேட்பாளர் ஆசி தியாகராஜனை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் அப்பொழுது வேட்பாளர் ஆசி தியாகராஜன் பேசுகையில் கரூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் கோடி நலத்திட்ட உதவிகளை பெற்று தந்த அன்பு தம்பி செந்தில் பாலாஜியின் ஆசி பெற்ற வேட்பாளரான எனக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு செலுத்தும் படி வாக்காளர்கள் மத்தியில் கோரிக்கை விடுத்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரரும், கரூர் திமுக தேர்தல் பொறுப்பாளமான அசோக்குமார் பேசும்போது கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளும் திமுக வெற்றி பெற வேண்டும் அதேபோல் கரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஆசித் தியாகராஜன் 50000 வாக்கு வித்தியாசத்தில் உதயசூரியன் சின்னம் வென்றது என வெற்றிகணியை தமிழக முதல்வர் திராவிட மாடல் ஆட்சி 2.0 நாம் சமர்ப்பிக்க அனைவரும் ஒன்றாக இணைந்து ஆசி தியாகராஜன் அவர்களை வெற்றி பெற பாடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும், விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளும், மக்கள் நீதி மையக் கட்சியின் நிர்வாகிகளும் உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
