டெல்லிக்கு தமிழ்நாடு என்றுமே அவுட் ஆஃப் கன்ட்ரோல்தான் என்பதை நிரூபிப்போம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக வேட்பாளர் செல்லப்பாண்டியனை ஆதரித்து விராலிமலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், “டெல்லிக்கு தமிழ்நாடு என்றுமே அவுட் ஆஃப் கன்ட்ரோல்தான் என்பதை நிரூபிப்போம். டெல்லி Vs தமிழ்நாடு என்ற உரிமைப் போரில் வெல்வோம் ஒன்றாக… ஏற்கனவே 10 தேர்தல்களில் பழனிசாமிக்கு நாம் தோல்விகளை கொடுத்திருக்கிறோம். இந்தமுறை 11வது தோல்வி கிடைக்கப் போவதை குறிக்கவே பழனிசாமி இரட்டை விரலைக் காட்டுகிறார்” என்றார்.

