Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆடுகளை கடித்து குதறிய நாய்கள்… பெரம்பலூரில் பரிதாபம்..

பெரம்பலூரை அடுத்த செங்குணம் அண்ணா நகரைச் சேர்ந்தவர்கள் தர்மன்-பூங்கா தம்பதியினர். இவர்கள் சொந்தமாக 10 ஆடுகளை பட்டி அமைத்து வளர்த்து வருகின்றனர். பூங்கா என்பவர் தினந்தோறும் ஆடுகளை மேய்து பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று பகல் முழுவதும் ஆடுகளை மேய்த்து விட்டு மாலையில் ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டார். இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் பட்டியில் ஆடுகள் நீண்ட நேரமாக கத்தி கொண்டிருந்ததை அறிந்த பட்டிக்கு அருகில் வசிக்கும் முத்தையா, திருமூர்த்தி ஆகியோர் சந்தேகத்தின் பேரில் பட்டிக்குச் சென்று டார்ச் லைட் அடித்து பார்த்த போது பட்டியிலிருந்த ஆடுகள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து தர்மன் பூங்கா தம்பத்தியினருக்கு தகவல் கொடுத்துள்ளர்.அவர்கள் வந்து பார்த்த போது பட்டிக்கு உள்ளே 2 ஆடுகளும் பட்டிக்குள்ளே 3 ஆடுகளும் இறந்து கிடந்துள்ளன. ஆடுகளில் இருந்த காயங்களை வைத்தும் பட்டிக்கு அருகில் இருந்தவர்கள் நீண்ட நேரமாக அப்பகுதியில் நாய்கள் குரைத்து கொண்டிருந்ததாகவும் என்ற ஆடுகளை நாய்கள் தான் கடித்து குதறியதில் இறந்திருக்கும் என்று கூறப்படுகிறது மேலும் இறந்த ஆடுகள் சுமார் 35 ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!