Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பூனையிடம் சிக்கி தவித்த நாய்… வீடியோ வைரல்…

புதுச்சேரி அடுத்த வம்புபட்டு கிராமத்தில் கற்பக விநாயகர் நகரில் உள்ள வீட்டு மாடியில் இருந்து நாய் ஒன்று கீழே இறங்கியது. அப்போது அந்த வழியில் பூனை ஒன்று இருந்தது. நாய் வருவதை பார்த்த, அந்த பூனை சீற்றத்துடன் நாயை தடுத்து நிறுத்தியது. இதனால் கீழே இறங்க முயன்ற நாயால், முடியவில்லை. அப்போது அந்த பூனை என்னைக் கேட்காமல் நீ உள்ள வந்து இருக்கலாம். ஆனால் நான் சொல்லாமல் நீ வெளியே போக முடியாது என்றபடி ஒரு மணி நேரமாக நாயை படிக்கட்டில் இருந்து இறங்கவிடாமல் பூனை வழி மறித்துக் கொண்டே இருந்தது.

ஆனால் கீழே இறங்கும் என்ற நாய்க்கு அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்ததால், மிகவும் கஷ்டபட்டு கைபிடி இடைவெளியில் நாய் குதித்து ஓடியது. அப்போதும் கூட நாயை, முறைத்து படியே பூனை பார்த்து கொண்டு இருந்தது. இந்த தற்போது காட்சி சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!