திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் இக்பால் காலனி சேர்ந்தவர் முகமது நூர்தீன் மகள் பாத்திமா ( 28. ) இவருக்கும் செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரம் பகுதியைச் சேர்ந்த அமீர் பஷீர்
(30) என்பவருக்கும் கடந்த 2023 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் திருமணம் ஆன சில நாட்களில் அமீர் பஷீர் பாத்திமாவிடம் கூடுதலாக வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளார் அவரது பெற்றோர் பாபு பாஷா (64) மற்றும் வஜிதா பேகம் (54) ஆகியோரும் சேர்ந்து பாத்திமாவை துன்புறுத்தி உள்ளனர் மேலும் கர்ப்பமாக இருந்த அவரை திருச்சியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர் இங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது இந்த நிலையில் பாத்திமாவின் கணவர் அமீர் பஷீர் உட்பட அவரது குடும்பத்தினர் காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூரை சேர்ந்த காதர் பாஷா ( 68 ) அவரது மனைவி நஜ்மா ( 58 ) சென்னை அம்பத்தூரை சேர்ந்த புளிமா (72 )ஜெரினா (52) மற்றும் பாஷா பாத்திமாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்துள்ளனர் இது குறித்து அனைத்து மகளிர் போலீசார் பாத்திமாவின் கணவர் உட்பட அவரது குடும்பத்தினர் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
