Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மதுபோதையில் அரசு பஸ்சை இயக்கிய டிரைவர்… பயணிகள் அதிர்ச்சி

கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் மதுபோதையில் அரசு பேருந்தை ஓட்டுநர் இயக்கியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். மதுபோதையில் சின்னசேலம் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்தை நிறுத்திவிட்டு ஓட்டுநர் சென்றுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் செயல்பட்டு வரும் போக்குவரத்து கழக பணிமனையில் சென்னை, விழுப்புரம் மற்றும் சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள காகம்பாடி, நைனார்பாளையம் , கச்சிராயப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு அரசு பேருந்து இயக்கபட்டு வருகிறது. நேற்று முன்தினம் இந்த அரசு பேருந்தை சதீஷ்குமார் எனும் ஓட்டுநர் சின்னசேலத்தில் இருந்து நரையூர் செல்லக்கூடிய அரசு பேருந்தை பயணிகளுடன் இயக்கி வந்திருக்கிறார்.

இந்த பேருந்தை அதிவேகமாக சதீஷ்குமார் ஒட்டியது பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பேருந்தை சின்னசேலம் காவல் நிலையத்திற்கு முன்பு நிறுத்தியுள்ளார். இதனிடையில் அரசு பேருந்து ஓட்டுநர் சதிஷ்குமார் போதையில் தள்ளாடும் காட்சிகள் சமூக வலையத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அரசு பேருந்து ஓட்டுநர் சதீஷ்குமார் மீது போக்குவரத்து துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் உயர் அதிகாரிகளுக்கு இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் இன்று இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!