Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போதைப்பொருள் விவகாரம்… அமைச்சர் சரத்குமார் விளக்கம்

போதைப்பொருள் விவகாரம்...?.. அமைச்சர் சரத்குமார் விளக்கம்

அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற பழைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் திடீரென வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது குறித்து அவரே அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார். போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான இந்த அவதூறு புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அமைச்சர் சரத்குமார் தற்போது விளக்கம் அளித்து புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது தரப்பு உண்மையை விளக்கியுள்ளார்.

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிரிக்கெட் ஸ்டேடியம் (Cricket Stadium) ஒன்றில் நடைபெற்ற நிகழ்வின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் தவறான கோணத்தில் பரப்பப்பட்டு வருகிறது. அதில் அமைச்சர் சரத்குமார் ஏதோ ஒரு பொருளைப் பயன்படுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்ததால், அது போதைப்பொருள் பயன்பாடு என சமூக வலைத்தளங்களில் சிலர் வதந்திகளைப் பரப்பத் தொடங்கினர். ஒரு பொறுப்பான அமைச்சர் மீது இத்தகைய கடுமையான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது அரசியல் மற்றும் பொது வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியது.

அமைச்சர் சரத்குமார் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு திரும்பிய உடனே, அவரைப் பற்றிய இந்த அவதூறு வீடியோ இணையத்தில் திட்டமிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ள அமைச்சர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிரிக்கெட் மைதானத்தில் தனது குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதாகவும், அப்போது குழந்தைக்குக் கொடுப்பதற்காக மாத்திரையைத் தான் பொடியாக்கி கையாண்டதாகவும், அதைச் சிலர் தவறாகச் சித்தரித்துள்ளதாகவும் முழு விவரத்தையும் விவரித்துள்ளார்.

error: Content is protected !!