Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போதை மாத்திரை விற்பனை -வாலிபர் கைது- திருச்சி க்ரைம்…

கஞ்சா விற்ற வாலிபர் கைது... பல லட்சம் மோசடி- திருச்சி க்ரைம்

பாலக்கரையில் போதை மாத்திரை விற்பனை செய்த வாலிபர் கைது

திருச்சி நவ 16- திருச்சி பாலக்கரை பீமநகர் பக்காளி தெரு பல்நோக்கு கட்டிட அலுவலகம் அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக பாலக்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது ஒரு வாலிபர் போதை மாத்திரை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்தபோது பீமநகர் கூனி பஜார் கோரிமேடு பகுதியை சேர்ந்த பாண்டி என்கிற வீரமுத்து (வயது 26)என்பது தெரிய வந்தது இதையடுத்து போலீசார் வீரமுத்துவை கைது செய்து அவரிடமிருந்து போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

வெவ்வேறு சம்பவங்களில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

திருச்சி நவ 16 – திருச்சி காஜாமலை நேரு நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கேகே நகர் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்பொழுது இரண்டு வாலிபர்கள் கஞ்சா விற்றுக் கொண்டு இருந்ததை பார்த்த போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கருமண்டபம் ஜெயா நகர் விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்த பிரகாஷ் ராஜா (வயது 20) அதே பகுதி ராமச்சந்திர நகரை சேர்ந்த சரவணகுமார் (வயது 21) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 5 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர் இதே போன்று திருச்சி ராம்ஜி நகர் திருச்சி – திண்டுக்கல் சாலையில் கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்த உறையூர் மேட்டு தெருவை சேர்ந்த தமிழ்செல்வன் (வயது 19) என்ற வாலிபரை மதுவிலக்கு பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பூபதி வழக்கு பதிவு செய்து கைது செய்து அவரிடமிருந்து 50 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

error: Content is protected !!