திருச்சியில் போதை மாத்திரை தராததால் வாலிபரை உருட்டு கட்டையால் கும்பல் தாக்கி உள்ளது.இந்த சம்பவத்தில் ரவுடி உள்பட 2 பேரைபோலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி கே கே நகர் தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 23) இவரிடம் கே சாத்தனூர் பகுதியை சேர்ந்த கோபிநாத் (வயது 26) ரவுடி மற்றும் அவரது நண்பர்கள் சிவக்குமார் (வயது 23) மற்றும் அபிலேஷ் ஆகிய மூன்று பேர் சதீஷ்குமார்வீட்டுக்கு நேற்று சென்று சந்தித்து அவரிடம் போதை மாத்திரை தருமாறு கேட்டு உள்ளனர். அதற்கு சதீஷ்குமார் தன்னிடம் போதை மாத்திரை எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.
ஆனால் அந்த கும்பல் அவரிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு சதீஷ்குமாரை உருட்டு கட்டையால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.இந்த சம்பவத்தில் காயம் அடைந்த சதீஷ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்து சதீஷ்குமார் கேகே நகர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் ரவுடி கோபிநாத் மற்றும் அவரது நண்பர்கள் சிவக்குமார் அபிலேஷ் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் சிவசங்கரை போலீசார் கைது செய்து உள்ளனர்.கோபிநாத் மற்றும் அபிலேஸ்சை தேடி வருகின்றனர்.இந்நிலையில் சதீஷ்குமார் யிடம் ரவுடி கும்பல் போதை மாத்திரை கேட்டது குறித்தும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
