Skip to content

போதை பொருட்கள் , மாத்திரைகள் பறிமுதல்… டூவீலர் திருடர்கள் கைது..திருச்சி மாவட்ட க்ரைம்…

  • by Authour

திருச்சியில் போதை பொருட்கள், மாத்திரைகள் பறிமுதல்… 3 பேர்கைது

திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ் சரகம் சண்முகா நகர் பகுதியில் போதை பொருட்கள் விற்கப்படுவதாக தகவல் வந்தது. இதையடுத்து சண்முகா நகர் பகுதியில் உள்ள வங்கி ஏ.டி.எம் அருகில் சப்-இன்ஸ்பெக்டர் தாயுமான் தலைமையிலான போலீசார் அதிரடி வாகன சோதனை நடத்தினர் . அப்போது அங்கு வந்த டூவீலர் ஒன்றை மறித்து சோதனையிட்டனர். அதில் கான்ஸ், விமல், கூல்லிப் உள்ளிட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பெட்டி, பெட்டியாக கடத்தி வந்தது. இருசக்கர வாகனம் மற்றும் போதைப்பொருட்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் உய்ய கொண்டான் திருமலையைச் சேர்ந்த ஆனந்தம், சீனிவாச நகரை சேர்ந்த ஜெய்சங்கர் என்பது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

 

பாலக்கரையில் அதிரடி சோதனை

இதே போன்று திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் ஆலம் தெரு சந்திப்பு பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக பாலக்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது .இதையடுத்து இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அதைபகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் விசாரணை செய்ததின் அடிப்படையில் போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகள் விற்பனை செய்ததாக முதலியார் சத்திரம் பகுதியைச் சேர்ந்த நைனா முகமது என்பவரை போலீசார் கைது செய்தனர்.மேலும் முகமது முஸ்தபா என்பவரை தேடி வருகின்றனர். கைதானவரிடம் இருந்து 102 மாத்திரைகள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

 

மயங்கி விழுந்து அரசு பஸ் டிரைவர் சாவு…

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முத்தையன் (58). அரசு பஸ் டிரைவர். இவர் உப்பிலியபுரம் பனிமனையில் பணிபுரிந்து வந்தார் . நேற்று திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள பெரிய மிளகு பாறை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்திற்கு வந்தார் . அங்கு அவர் எதிர்பாராத விதமாக மயங்கி விழுந்தார். உடனே அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர் . இது குறித்து அவரது மனைவி செல்வி கொடுத்த புகாரின் அடிப்படையில் கண்டோன்மென்ட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்.

திருச்சியில் டூவீலர் திருடிய சிறுவர் உள்பட 2 பேர் கைது

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஆர்.எம்.எஸ் காலனியைச் சேர்ந்தவர் முருகேசன் .இவரது மகன் வீரபாண்டி (20 )இவர் தனது இருசக்கர வாகனத்தை வீட்டு முன்பு நிறுத்தி இருந்தார். பின்னர் வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து எடமலை பட்டிப்புதூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் மோட்டார் சைக்கிள் திருடியதாக 17 வயது சிறுவன் மற்றும் எடமலைப்பட்டி புதூரை சேர்ந்த சஞ்சய் ஆகிய இரண்டு பேரை கைது செய்தார். சஞ்சய் சிறையில் அடைக்க பட்டார். சிறுவர் சிறுவர் சீர்திருத்தச் பள்ளியில் அடைக்கப்பட்டார். அவர்களிடமிருந்து இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வரும் கே.கே.நகரை சேர்ந்த அசோக் என்பவரின் டூவிலரும் திருடு போய்விட்டது. இது குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்துவருகின்றனர்.

error: Content is protected !!