Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போதைப்பொருள் விற்பனை செய்த 6 பேர் கைது

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

சென்னை, கொடுங்கையூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களைக் குறிவைத்து போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், தனிப்படை போலீசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

நடவடிக்கையின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். கைதானவர்களில் சிலருக்கு ஏற்கனவே குற்றப்பின்னணி இருப்பதாகத் தெரிகிறது.

அந்த கும்பலிடம் இருந்து சுமார் 50 கிராம் மெத்தபெட்டமைன் (Methamphetamine) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு பல லட்சங்கள் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

போதைப் பொருட்களை விநியோகிக்க அவர்கள் பயன்படுத்திய பைக்குகளும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

error: Content is protected !!