திருவிடைமருதூர் அருகே தனியார் பள்ளி மாணவன் மதுபோதையில் ஆபாசமாக பேசி ரகளை ஈடுபடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரல் .
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கதிராமங்கலம் கிராமத்தில் தனியார் பள்ளி சேர்ந்த மாணவன் ஒருவன் வயல்வெளியில் தலைக்கேறிய மது போதையில் ஆபாசமாக பேசி ரகலையில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலை தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை வேதனைக்கு ஆளாக்கியது.
இளம் வயதில் பள்ளி மாணவர்கள் இதுபோன்று போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருவதை தடுக்கும் விதத்தில் பந்தநல்லூர் காவல் நிலைய போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு ரோந்து பணிகளை தீவிர படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது .
மேலும் பந்தநல்லூர் திருப்பனந்தாள் மற்றும் திருநீலக்குடி புறநகர் பகுதிகளில் கஞ்சா மற்றும் போதைபொருட்கள் விற்பனை அதிகமாக இருப்பதை காவல்துறையினு கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழக அரசு அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் போதை விழிப்புணர்வு வகுப்புகள் நடத்த வேண்டும் எனவும் பெற்றோர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

