Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டில்லியை தொடர்ந்து பீகாரிலும் நிலநடுக்கம்

டில்லியில் இன்று அதிகாலை  5. 36 மணிக்கு  நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து பீகார் மாநிலத்தில் இன்று காலை 8.02 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வால் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கமானது ரிக்டர்  அளவில் 4.0 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 25.93 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 84.42 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் இல்லை.

 

error: Content is protected !!