பாகிஸ்தானில் இன்று (அக்.26) ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி காலை 6.06 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆகவும், அதனை தொடர்ந்து காலை 11.15 மணிக்கு 4.2 ஆகவும் நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன. பூமிக்கு அடியில் 77 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
பாகிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 2 இடத்தில் நிலநடுக்கம்
