தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே கல்லூரி மாணவர் இசக்கி ராஜா வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் சம்பவத்தின் சுவடு மறைவதற்குள் தூத்துக்குடியில் ஒரே வாரத்தில் 5-க்கும் மேற்பட்ட படுகொலைகள் நடந்துள்ளதாகவும், நாளுக்கு நாள் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், சட்டம்-ஒழுங்கு நிலையை சுட்டிக்காட்டினாலும் அலட்சியம் காட்டி வரும் அரசு, மக்களின் பாதுகாப்போடு விளையாடுவதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாளுக்கு நாள் சட்டம் ஒழுங்கு சீரழிகிறது: கனிமொழி எம்.பி. கண்டனம்
