Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்கள் மின் கட்டணம் செலுத்த டிச. 10 வரை அவகாசம்… அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு…

தமிழக மின்வாரிய துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் வங்க கடலில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெஞ்சல் புயலாக வலுவெடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை மற்றும் புயல் காற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தொடர்ந்து முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி அரசு பல்வேறு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் மின் கட்டணம் செலுத்துவதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு 30-11-24 முதல் 9-12-24 வரை மின் கட்டணம் மற்றும் இதர நிலுவை தொகையினை செலுத்த வேண்டிய மின் நுகர்வோர் அபாரத தொகை இல்லாமல் 10-12-24 வரை செலுத்த கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழக மின்வாரிய துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!