Skip to content
Home » மாநில அளவில் ஈட்டி எறிதல் போட்டி… புதுகை மாணவன் சாதனை….

மாநில அளவில் ஈட்டி எறிதல் போட்டி… புதுகை மாணவன் சாதனை….

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் தாஞ்சூர் முருகானந்தம் மகன் நித்தின்குமார், காரைக்குடி சி.பி.எஸ்.சி லீடர் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 11 ம் வகுப்பு பயின்று வரும் மாணவன்.இவர் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான  மாநில அளவிலான ஈட்டிஎறிதல் போட்டியில்  கலந்து கொண்டு 42.87 மீட்டர் துரம் ஈட்டியினை எரிந்து முதலிடம் பிடித்து தங்க பதக்கத்தை வென்று சாதனை படைத்தார். சாதனை படைத்த நித்தின்குமாரை  பள்ளி நிர்வாகமும், பெற்றோர்களும், பொது மக்களும் வாழ்த்தினர்.

1 thought on “மாநில அளவில் ஈட்டி எறிதல் போட்டி… புதுகை மாணவன் சாதனை….”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!