திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள சக்தி ஜூஸ் கடையில் பணிபுரிபவர் அருண்குமார். இவர், நேற்று கடைக்கு அருகே அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று அந்த முதியவரின் உடலை கைப்பற்றி,மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இறந்தவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
